ADDED : பிப் 16, 2025 03:36 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க மேம்பாட்டு திட்ட முகாம் நடந்தது.
இதில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அரசு ,அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து, மாணவர்கள் அணிகள் தங்களது புத்தாக்க கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்தனர். இதில் முன்மாதிரிகள் செய்த 20 அணிகள் தேர்வு செய்யப்பட்டு, அதில் உள்ள 86 மாணவர்களுக்கு பயிற்சியளித்து, 20 செயல் வடிவங்களை மதிப்பீடு செய்ய மாவட்ட திட்ட மேலாளர் சத்யா, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, கல்லுாரி பேராசிரியர்கள் ஆலோசனைகளை கூறினார். இதில் தேர்வானவர்களுக்கு இறுதிப்போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. நிறைவு விழாவில் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

