நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீ வில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கலைக்கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது.
சென்னை வெர்டிக்கல் சொல்யூஷன் கம்பெனி மனித வள மேம்பாட்டு மேனேஜர்கள் பாலாஜி, பாலகிருஷ்ணன் ஆகியோர் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம், எம்.எஸ்சி, எம்.காம் கடைசி ஆண்டு மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தினர்.
இதில் 211 மாணவிகள், 193 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணனிடம், மனித வள மேம்பாட்டு மேனேஜர்கள் பாலாஜி, பாலகிருஷ்ணன் வழங்கினர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை கல்லூரி சேர்மன் ஸ்ரீதரன் பாராட்டினார்.
நேர்காணல் ஏற்பாடுகளை துறை தலைவர்கள், வேலைவாய்ப்பு அலுவலர் சீனிவாசன், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

