ADDED : ஜன 19, 2026 06:54 AM
காரியாபட்டி: காரியாபட்டியில் சென்னம்பட்டி கால்வாய் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.
நீர்வளத் துறை மூலம் ரூ.22 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மடைகள், பாலங்கள், மேலோட்ட நீர் போக்கி, தொட்டி பாலம், சுரங்க வழி நீர் போக்கி, சுரங்க வழி ஓடை நீர் போக்கி, தலை மதகு, கரிசல்குளம் கண்மாயின் நீர் கட்டுப்படுத்தி உள்ளிட்ட மறு கட்டுமானம், வழிப்படுத்து சுவர்கள் கட்டும் பணி, பிரதான வாய்க்கால் துார்வாரும் பணி செய்யப்பட உள்ளது.
இப்பகுதியில் உள்ள 10 கண்மாய்கள், மதுரை மாவட்டத்தில் 2 கண்மாய்கள் பயன்பெறும். ஆயிரத்து 686 ஏக்கர் பாசன வசதி பெறும். முன்னதாக பிசிண்டி குண்டாறு குறுக்கே ரூ.23 கோடியே 85 லட்சத்தில் அணைகட்டு அமைத்து, வக்கணாங்குண்டு உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில், அணை கட்ட அடிக்கல் நாட்டினார்.

