/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'பணிகளை முடிக்காத ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள்'
/
'பணிகளை முடிக்காத ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள்'
ADDED : ஜன 16, 2025 04:42 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் வளர்ச்சி பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்காத ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்யுங்கள், என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பழனிச்சாமி, கமிஷனர் ராஜமாணிக்கம், இன்ஜினியர் அபுபக்கர் சித்திக், கவுன்சிலர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:
பாலசுப்பிரமணியம், (மார்க்சிஸ்ட்): திருநகரம் பகுதியில் நகராட்சி தாமிரபரணி குடிநீர் வந்து ஒரு மாதம் ஆகிறது. தெருவில் கொசு தொல்லை தாங்க முடியவில்லை. கொசு மருந்து அடித்தும் பயன் இல்லை. நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள்தாமதமாக நடப்பதற்கு காரணம் என்ன.
ராமதிலகம், (அ.தி.மு.க.,): தற்போது புதிய வைரஸ் எச்.எம்.பி. வி. குறித்தானவிழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துங்கள்.மக்கள் தேவையில்லாமல் பயப்படுகின்றனர்.
ஜெயகவிதா, (தி.மு.க.,): தெற்கு தெரு பகுதியில் அதிக தெருக்கள் உள்ளது. போதுமான துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் பணியில் தொய்வு ஏற்படுகிறது. கூடுதலான பணியாளர்களை எனது பகுதிக்கு அமர்த்துங்கள்.
அப்துல்ரகுமான், (தி.மு.க.,): எனது 10 வது வார்டில் பத்துக்கு மேற்பட்ட மாட்டு இறைச்சி கடைகள் உள்ளன. மாட்டை அறுத்து அவற்றின் ரத்தம் மாறுகாலில் விடப்படுகிறது. இதனால் பெரும் சுகாதார கேடு ஏற்படுகிறது. கொசு தொல்லை தாங்க முடியவில்லை. எனது வார்டுக்கு என்று தனியாக கொசு மருந்து துப்புரவு பணியாளர்களை அனுப்புங்கள்.
தமிழ்காந்தன், (தி.மு.க.,): நாகலிங்க நகர் விரிவாக்க பகுதியில் தெருக்களில் வாறுகால் அமைக்க தெருக்களை தோண்டியும் , ரோடு போடுவதற்கு கற்களையும் ஜல்லியும் பரப்பி 6 மாதங்கள் ஆகியும் பணிகள்நடக்கவில்லை. உரிய காலத்தில் பணிகளை செய்யாத ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள்.
மீனாட்சி, (தி.மு.க.,): விருதுநகர் மெயின் ரோட்டில் புதிய வாறுகால் அமைக்கப்பட்டது. ஆனால் வாறுகாலில் உள்ள மண்ணை அப்புறப்படுத்தாததால் கழிவுநீர் செல்ல முடியாமல் உள்ளது. வாறுகால் கட்டியும் பயம் இல்லை. இவ்வாறு விவாதங்கள் நடந்தது.

