ADDED : ஜூன் 10, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
நரிக்குடி: நரிக்குடி கால்நடை அரசு மருத்துவமனை பகுதியில் சுற்றி திரிந்த இருவரை பிடித்து விசாரித்து, சோதனை செய்ததில் 30 கிராம் கஞ்சா இருப்பது தெரிந்தது.
அதனை பறிமுதல் செய்து நரிக்குடி ரமணா 24, மன்னார்குடியைச் சேர்ந்த ரவி ராமன் 19 ஐ போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் வெள்ளத்துரை 21, ராமநாதபுரம் கீழநரியணையைச் சேர்ந்த சேதுபாண்டியன் 25, ஆகியோரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து போலீசார் விசாரிக் கின்றனர்.
