ADDED : ஜன 24, 2026 06:10 AM
அ நிறம் | அளவு
திருச்சுழி: திருச்சுழி அருகே ஆலடி பட்டியை சேர்ந்த கார்த்திக், 23, இவரிடம் கஞ்சா வாங்குவதற்கு அருப்புக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார், 23, ராஜ்கமல், 28, சுந்தர்,27, அரவிந்த், 27, காரில் சென்றனர்.
ஆலடிபட்டி - கல்லூரணி ரோட்டில் டி.எஸ்.பி., பிரதீப், எம்.ரெட்டியபட்டி எஸ்.ஐ., ராமேஸ்வரன் மற்றும் போலீசார் அந்த வழியாக காரை சோதனை செய்தபோது அவர்களிடம் 150 கிராம் கஞ்சா வைத் திருப்பது தெரிய வந்தது.
விசாரிப்பிற்கு பின் கார்த்திக்கை கைது செய்து 75 ஆயிரம் ரூபாய் பணம், கார், டூவீலர் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர். எம். ரெட்டியபட்டி போலீசார் 6 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
