ADDED : பிப் 12, 2026 05:47 AM
அ நிறம் | அளவு
காரியாபட்டி: மல்லாங்கிணர் முடி யனூரைச் சேர்ந்தவர் முத்தையா 78, இவரது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த இவரது கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் கார் பற்றி எரிந்தது.
சத்தம் கேட்டு வெளியில் வந்த முத்தையாவை அதே ஊரைச் சேர்ந்த கோச்சடை, ராமர், முத்து வேல், சின்னமுத்து, மாயகிருஷ்ணன், முத்துமுருகன், விக்னேஷ், முத்துராம லிங்கம் உட்பட 11 பேர் தாக்கியதில் காயமடைந்து, விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மல்லாங்கிணர் போலீசார் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
