தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கார் கவிழ்ந்து விபத்து

கார் கவிழ்ந்து விபத்து

கார் கவிழ்ந்து விபத்து


ADDED : ஜூலை 04, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 05:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாத்துார்: சிவகாசியை சேர்ந்தவர் நிஜந்தன் 36,இவர் மனைவி ராஜ பிரியா 30. இவரது நான்கு வயது குழந்தையுடன் காரில் சாத்துாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு காரில் ஊருக்கு திரும்பினார். கீழத்தாயில்பட்டி விலக்கில் கார் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் அருகில் உள்ள பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. லேசான காயத்துடன் அவர்கள் உயிர் தப்பினர். வெம்பக்கோட்டைபோலீசார் விசாரிக்கின்றனர்.

கார் மோதி முதியவர் பலி

சாத்துார்: சிவகாசி அம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா 66.பழைய சாமான் விற்பனை தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி சென்று விட்டு நள்ளிச்சத்திரம் வந்துள்ளார். அங்கு நண்பரை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்புவதற்காக சாலை ஓரத்தில் பஸ்சிற்காக நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத கார் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

காருடன் பட்டாசு பறிமுதல்:ஒருவர் கைது

சாத்துார்: ஆலங்குளம் எஸ்.ஐ ., முனியாண்டி தலைமையில் போலீசார் ஏ.லட்சுமியபுரம் விலக்கில் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக திருத்தங்கல் ராமமூர்த்தி 24. உரிய உரிமம் இன்றி பொலிரோ மேக்ஸ் நான்கு சக்கர வாகனத்தில் பேன்சி ரக வெடிகளை விற்பனைக்காக எடுத்துச் சென்றது தெரிய வந்தது.வாகனத்துடன் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us