/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை தாக்கிய 10 பேர் மீது வழக்கு
/
குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை தாக்கிய 10 பேர் மீது வழக்கு
குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை தாக்கிய 10 பேர் மீது வழக்கு
குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை தாக்கிய 10 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 06, 2025 06:28 AM
காரியாபட்டி: காரியாபட்டி கொட்டங்குளத்தில் செம்மண் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமத்தினரை தாக்கிய, உரிமையாளர்கள் உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
காரியாபட்டி கொட்டங்குளத்தில் செம்மண் குவாரி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் லாரிகளில் கிராவல் மண் எடுத்து வந்தனர். செம்மண் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்த, அக்கிராமத்தினர் லாரிகளை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினர்.
இதில் ஆத்திரமடைந்த குவாரி உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், லாரியை விட்டு ஏற்றி கொல்ல முயற்சி செய்ததுடன், கடுமையாக தாக்கினர்.
இதில் காயமடைந்த 6 பேர் காரியாபட்டி, விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆவியூர் போலீசில் அர்ஜுனன் புகார் கொடுத்தார். குவாரி உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கண்ணன், ஜோதிமணி, ராஜபாண்டி, பாப்பையா, குமார், சகாதேவன், பூரண சந்திரன், செந்தில் உட்பட 10 பேர் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லாரியை கைப்பற்றினர்.

