/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வேலை வாங்கித் தருவதாக ரூ.1 லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு
/
வேலை வாங்கித் தருவதாக ரூ.1 லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு
வேலை வாங்கித் தருவதாக ரூ.1 லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு
வேலை வாங்கித் தருவதாக ரூ.1 லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு
ADDED : டிச 23, 2025 06:08 AM
சாத்துார்: திருச்சியை சேர்ந்தவர் கல்பனா, 38. சாத்துார் ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள இவரது மாமா வீட்டிற்கு வந்த போது அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் மகேஸ்வரன் என்பவரிருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. கல்பனாவிடம் மகேஸ்வரன்,
எனது அண்ணன் இளையராஜா திருச்சியில் தான் வசிக்கிறார். எனது மனைவி உமாதேவி சாத்துாரில் உள்ள அரசுடைமை வங்கியில் கிளார்க்காக பணிபுரிந்து வருகிறார். வங்கியில் நீங்கள் கிளார்க்காக பணியில் சேர கொஞ்சம் பணம் செலவாகும் என்றும் அட்வான்சாக ரூ. 1 லட்சம் தாருங்கள் என கேட்டுள்ளார். இதனை நம்பி ரூ.1 லட்சம் பணத்தை தந்த கல்பனாவுக்கு வேலை கிடைக்கவில்லை. பணத்தை திரும்ப கேட்டும் அவர்கள் தரவில்லை. சாத்துார் ஜே .எம் .2 நீதிமன்ற உத்தரவு படி சாத்துார் போலீசார் 3 பேர் மீதும் மோசடி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தம்பியை மது பாட்டிலால் அடித்த அண்ணன்
சிவகாசி: ரிசர்வ் லைன் நேருஜி நகரை சேர்ந்தவர் நாகராஜ் 25. இவரது உடன் பிறந்த அண்ணன் பாலமுருகன் 27 , குடும்ப செலவிற்கு பணம் தராமல் இருந்துள்ளார். இந்நிலையில் நாகராஜ் அப்பகுதியில் உள்ள கடையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பாலமுருகன் மது பாட்டிலால் தலையில் அடித்தார். நாகராஜ் தள்ளிவிட்டதில் பாலமுருகன் கீழே விழுந்து காயம் அடைந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.------
முதியவர் அடித்துக் கொலை
சாத்துார்: ஆலங்குளம் அருகே நரிகுளத்தைச் சேர்ந்தவர் ராஜா, 65. குழந்தைகள் இல்லை. இவர் மனைவியும் இறந்துவிட்டார். முதியவர் ராஜா நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு மடத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது அங்கு மது போதையில் வந்த அதே ஊரைச் சேர்ந்த முத்துப்பாண்டி,45. அங்கு கிடந்த மரக் கட்டையை எடுத்து ராஜாவை தலையில் தாக்கி தப்பினார். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் பலியானார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் மோதி பலி
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே சென்னம ரெட்டியபட்டியை சேர்ந்தவர் நல்லையா, 59, இவர் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு பொருட்கள் வாங்குவதற்கு பந்தல்குடிக்கு சென்றுள்ளார். பந்தல்குடி - புதூர் ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த டூவீலர் மோதியதில் பலியானார். பந்தல்குடி போலீசார் டூவீலரை ஓட்டி வந்த சிவலார்பட்டி வீரகணேஷ், 31என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

