/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பு: 3 பேர் மீது வழக்கு
/
அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பு: 3 பேர் மீது வழக்கு
அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பு: 3 பேர் மீது வழக்கு
அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பு: 3 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 02, 2025 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: தாயில்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர்,50. இவருக்கு சொந்தமான குடோனில் சிவகாசியை சேர்ந்த பாலமுருகன், 48. வாடகைக்கு பிடித்து அங்கு சிவகாசியை சேர்ந்த மோகன், 38. என்பவர் மூலம் பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், வருவாய் துறையினர் அங்கு ஆய்வு செய்த போது அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
போலீசார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பேன்சி ரக பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3பேரை தேடி வருகின்றனர்.
வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக் கின்றனர்.