/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மல்லிகை மொட்டு மனதை தொட்டு செடியில் திருடியவர் மீது வழக்கு
/
மல்லிகை மொட்டு மனதை தொட்டு செடியில் திருடியவர் மீது வழக்கு
மல்லிகை மொட்டு மனதை தொட்டு செடியில் திருடியவர் மீது வழக்கு
மல்லிகை மொட்டு மனதை தொட்டு செடியில் திருடியவர் மீது வழக்கு
ADDED : ஜன 16, 2025 11:49 PM
திருச்சுழி:விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதிகளில் மல்லிகை விளைச்சல் அதிகம்.
திருச்சுழி அருகே சித்தலகுண்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இருளன், 34. மல்லிகை பயிரிட்டுள்ளார். தினமும் 7 முதல் 8 கிலோ வரை பூக்கள் கிடைக்கும். மார்க்கெட்டில் பூ வரத்து குறைவால், 1 கிலோ மல்லிகை 2 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது.
சில நாட்களாக செடிகளில் பூத்திருந்த மல்லிகை பறிக்கும் போது குறைவதை கண்டார். சந்தேகம் எழுந்ததால் நிலத்தில் இரவுக்காவல் இருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் செடிகளில் உள்ள மல்லிகை பூக்களை பறிப்பதை கண்டார்.
அவரை பிடித்து திருச்சுழி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில், அவர் தமிழ்பாடியை சேர்ந்த வேல்முருகன், 36, என்பதும், 10 நாட்களாக தோட்டத்தில் புகுந்து தினமும் மல்லிகை பூவை திருடி விற்றதையும் ஒப்புக்கொண்டார். வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.