/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு ஆலை வெடிவிபத்து உரிமையாளர் மீது வழக்கு
/
பட்டாசு ஆலை வெடிவிபத்து உரிமையாளர் மீது வழக்கு
ADDED : டிச 27, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அருகே முதலிப்பட்டியில் செயல்படும் பத்திரகாளி பேப்பர் கேப்ஸ் பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் வெடி விபத்து ஏற்பட்டது. பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட ஆலமரத்துப்பட்டி முனீஸ்வரி 38, சங்கரேஸ்வரி 45, ஆகியோர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு விருதுநகர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விஸ்வநத்தம் வி.ஏ.ஓ., காளியப்பன் புகாரின் பேரில் சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்த ஆலை உரிமையாளர் தேசிங்குராஜா, ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த போர்மேன் சுந்தரவேல் மீது வழக்கு பதிந்து வச்சக்காரப் பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

