/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் ராணுவ வீரர் மீது வழக்கு
/
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் ராணுவ வீரர் மீது வழக்கு
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் ராணுவ வீரர் மீது வழக்கு
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் ராணுவ வீரர் மீது வழக்கு
ADDED : ஆக 03, 2025 02:15 AM
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ராணுவ வீரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம் மாலை போன் வந்தது. போனை எடுத்த ஏட்டு பாஸ்கரனிடம், பேசிய நபர் தன் பெயர் ஜெயபிரகாஷ் என்றும், ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிவதாகவும், பந்தல்குடியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பள்ளியில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். ஒரு மணி நேர சோதனையில் வெடிகுண்டு தகவல் புரளி என தெரிய வந்தது.
போலீசார் விசாரணையில், சிவகாசியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதும், அந்த பள்ளியில் வேலை பார்க்கும் இவரது மனைவியை பணியில் இருந்து நிறுத்துமாறு கூறியும் பள்ளி கேட்கவில்லை என்பதால் குண்டு மிரட்டல் விடுத்ததாகவும் தெரிந்தது. ஜம்முவில் உள்ள ஜெயப்பிரகாஷ் மீது பந்தல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.