/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெம்பக்கோட்டை ஆலை வெடி விபத்து மூன்று பேர் மீது வழக்கு: இருவர் கைது

ADDED : ஜூலை 19, 2025 12:26 AM
சாத்துார்: வெம்பக்கோட்டை செவல்பட்டி சரவணா பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஆலை உரிமையாளர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.
துலுக்கன்குறிச்சியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவருக்கு சொந்தமான சரவணா பட்டாசு ஆலை செவல்பட்டியில் உள்ளது. நேற்று முன்தினம் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வரும் பேர் நாயக்கன்பட்டிகொங்கலாபுரம் ஜெயராம், 37. பீடி குடித்த போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயம் அடைந்து சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் மாட்டு தொழுவத்தில் இருந்த பட்டாசு கழிவுகள் எரிந்தன.
வெம்பக் கோட்டை தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
வி.ஏ.ஓ., சீனி ராஜ் புகார் படி ஆலை உரிமையாளர் துலுக்கன் குறிச்சி சரஸ்வதி, இவர் மகன் மேலாளர் கார்த்திக் செல்வம், 29. குத்தகைதாரர் விஜய கரிசல்குளம் சக்திவேல், 45. ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து மேலாளர், குத்தகைதாரர் ஆகிய இருவரை வெம்பக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.