/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கடும் வெயிலால் கால்நடை வளர்ப்போர் பாதிப்பு வனத்தை ஒட்டிய பகுதிகளில் அனுமதி எதிர்பார்ப்பு

ADDED : செப் 08, 2025 06:13 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் சுற்றுப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயிலால் தீவனம், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு கால்நடை வளர்ப்போர் தவிப்பில் உள்ளனர். மலைப்பகுதியை ஒட்டியுள்ள நிலப்பகுதிக்கு மேய்ச்சலுக்கான அனுமதியை எதிர்பார்த்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஒட்டிய ராஜபாளையம், சேத்துார், தேவதானம் சுற்று பகுதிகளில் நீர் ஆதாரங்கள் அதிகம் உள்ளதால் மேய்ச்சல் மாடுகள் தொழிலாக செய்து வருவோர் அதிகம்.
சாகுபடிக்கு பின் இயற்கை உரங்களுக்காக கூட்டமாக மாடுகளை விவசாய நிலங்களில் நிறுத்தி வைத்து கிடைக்காக பயன்படுத்தி இதற்கான குறிப்பிட்ட தொகை வசூலித்து வந்தனர்.
கடந்த காலங்களில் மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு வனத்துறையால் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அத்துடன் நகர் பகுதி ஒட்டி மற்றும் கிராமங்களில் மேய்ச்சல் நிலங்கள் இவற்றிற்காக பயன்பட்டு வந்தன.
இந்நிலையில் கடும் வெயில் காரணமாக பெரும்பாலான கண்மாய், குளங்கள் வற்றி உள்ளதால் கிடை மாடுகளுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய இயலாமலும் அதிக வெயிலால் புற்கள் காய்ந்து தீவன பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோவிந்தன்; பயிர்களுக்கான இயற்கை உரங்களுக்கும், நாட்டு இன ரக மாடுகளுக்கும் ஆதாரமாக இருந்து வருகிறது.
தற்போது கடும் கோடையால் தீவனம் மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை.
முன்பு போல் மலையை ஒட்டிய பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கான அனுமதி வழங்கி கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய அரசு முன் வர வேண்டும்.