/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மேய்ச்சல் நிலங்களுக்கு அல்லாடும் கால்நடைகள் :வனத்துறை மறுப்பால் தீவனத்திற்கு திண்டாட்டம்
/
மேய்ச்சல் நிலங்களுக்கு அல்லாடும் கால்நடைகள் :வனத்துறை மறுப்பால் தீவனத்திற்கு திண்டாட்டம்
மேய்ச்சல் நிலங்களுக்கு அல்லாடும் கால்நடைகள் :வனத்துறை மறுப்பால் தீவனத்திற்கு திண்டாட்டம்
மேய்ச்சல் நிலங்களுக்கு அல்லாடும் கால்நடைகள் :வனத்துறை மறுப்பால் தீவனத்திற்கு திண்டாட்டம்
ADDED : செப் 14, 2024 01:54 AM
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள இடங்கள் நீர்நிலைகளால் விவசாய பயன்பாட்டு பகுதிகள் அதிகம்.
இதுதவிர குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யவும், வருமானத்திற்காகவும் நாட்டு இன மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பது இப் பகுதிகளில் வழக்கம்.
பொதுவாக நாட்டு இன மாடுகளை தொழுவத்தில்அடைத்து தீவனம் கொடுத்து பராமரிப்பதுஇல்லை. நாட்டின மாடுகள் குறைந்த அளவு பால் தரும் என்பதால் விவசாயிகள் தங்கள் சொந்த தேவைக்கு மட்டும்பயன்படுத்தி கிடைக்கும்பாலினை வெளியே விற்பனை செய்வதில்லை.
இவற்றிற்கான தீவனங்களை அந்தந்த குடும்பத்தினர் விவசாய நிலங்களில் கொண்டு வரும் பொருட்களை தீவனமாக உபயோகித்து வந்தனர்.
காலப்போக்கில் கால்நடைகள் பெருக்கம் விவசாய நில பயன்பாடு குறைவு உள்ளிட்டவைகளால் கால்நடைகளுக்கு தனியாக தீவனம் வழங்க முடியாமலும், அதிக விலை கொடுத்து வெளியில் வாங்க முடியாத நிலை இருந்தது.
இக்காரணத்தால் மேய்ச்சல் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களிடம் ஊர் பொது மந்தையில் மாடுகளை ஓட்டிவிட்டு வனம் சார்ந்த பகுதிகளில் மேய்ச்சலுக்கு விட்டு மாலை நேரங்களிலோ சில நாட்கள் கழித்தோ அவை வீடுகளுக்கு வந்து சேரும் வழக்கம் இருந்தது.
இந்நிலையில் வனப்பகுதியில் வனவிலங்குகள்பாதுகாப்பு கருதி மேய்ச்சலுக்கு அனுமதி தொடர்ந்து மறுக்கப்படுவதுடன் நகரை சுற்றி இருந்த மேய்ச்சல் நிலங்கள் அதன் வகைப்பாடு மாற்றப்பட்டு குடியிருப்புகளாகவும் அரசு கட்டிடங்களாகவும் மாறிவிட்டன.
இதனால் மாடுகளும் அதற்கான தீவனம் கிடைக்காமல் சுற்றி வருவதுடன் மேய்ச்சல் நிலங்களும் காணாது மீதமுள்ளவை காய்ந்தும் கிடப்பதால் மாடுகளை வளர்ப்போர் சங்கடத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதற்கு தீர்வாக கூட்டமாக மேய்ச்சல் மாடுகளை வளர்க்கும் நாட்டு மாடுகளை வளர்க்கும் சங்கத்தினர் மலைப்பகுதியை ஒட்டியுள்ள வனத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் தங்களுக்கான மேய்ச்சல் உரிமையை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.