/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பொது இடங்களில் சி.சி.டி.வி .,கேமரா செயல்பாட்டில் இருப்பது அவசியம்; குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும்
/
பொது இடங்களில் சி.சி.டி.வி .,கேமரா செயல்பாட்டில் இருப்பது அவசியம்; குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும்
பொது இடங்களில் சி.சி.டி.வி .,கேமரா செயல்பாட்டில் இருப்பது அவசியம்; குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும்
பொது இடங்களில் சி.சி.டி.வி .,கேமரா செயல்பாட்டில் இருப்பது அவசியம்; குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும்
ADDED : டிச 28, 2024 06:01 AM
ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டத்தில் வீடுகளை உடைத்து திருட்டு, நகை பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்கள் நடந்து வருகிறது. இவற்றை கண்டுபிடித்து கட்டுப்படுத்த பொது இடங்களில் கேமரா பொருத்தி கண்காணிப்பது அவசியம்.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொலை, பாலியல், வாகன திருட்டு, பூட்டு உடைத்து நகை திருட்டு, வீடுபுகுந்து திருட்டு, செயின் பறிப்பு நடந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் வீடுகள் பூட்டி இருப்பதை நோட்டமிட்டு ஆளில்லா நேரத்தில் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகை பணம் திருடி சென்றுள்ளனர். ஒவ்வொரு சம்பவத்திற்கு பின்னும் போலீசார் திருட்டுப் போன வீடுகளின் அருகே உள்ள சி.சி.டி.வி., கேமராக்கள் முக்கிய தடயமாக இருந்து வருகிறது.
சம்பவ நேரத்தில் அப்பகுதி வழியாக சென்ற சந்தேக படுவோரின் முகப்பதிவுகளை முக்கிய குற்றவாளிகளுடன் ஒப்பீடு செய்வதும் அருகிலுள்ள வட்டாரங்களில் இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபடும்போது எடுத்த பதிவுகளையும் முடிவுக்கு வருகின்றனர்.
பொதுவாகவே திருட்டு, கொள்ளை சம்பவங்களில் அப்பகுதியில் உள்ளவர்கள் சாட்சி சொல்வதற்கு தயக்கமின்றி முன்வருவது இல்லை. போலீசாரின் விசாரணைக்கு அழைப்பு மற்றும் தேவையற்ற பிரச்சனை என்பதால் திருட்டு குறித்து தகவல் தெரிந்தாலும் ஒதுங்கி செல்கின்றனர்.
இது போன்ற நேரங்களில் போலீசாருக்கு முக்கிய தடயமாக இருப்பதுடன் சாட்சியாகவும் சி.சி.டி.வி., இருந்து வருகிறது.
எனவே குடியிருப்பு பகுதிகள், தெரு நுழையும் பகுதிகள், பஸ் ஸ்டாப், வணிக வளாகங்கள், இடங்களில் அந்தந்த பகுதி குடியிருப்பு நல சங்கங்கள், அமைப்புகள் அதிக திறன் கொண்ட நவீன சிசிடிவி கேமராக்களை பொருத்த அறிவுறுத்துகின்றனர்.
தனிப்பட்ட வீடுகளில் பதிவுகளை கேட்டு பெறுவதிலும் வீட்டின் உரிமையாளர்களுக்கு சிக்கல் ஏற்படுவதால் சி.சி.டி.வி., கேமரா ரீசார்ஜ் செய்யவில்லை, கேமரா பழுதடைந்துள்ளது, போன்ற காரணங்களை கூறி சமாளிக்கின்றனர்.
எனவே இதற்கு மாற்றாக மக்கள் கூடும் இடங்கள், பஸ் ஸ்டாண்ட், அரசு அலுவலகங்கள், போலீசாரின் தொடர்பு இடங்கள், முச்சந்திகள் போன்றவற்றில் கேமராக்களை அமைக்க போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். குற்றச்சம்பவங்களுக்கு முக்கிய சாட்சியாக இருந்து வரும் கண்காணிப்பு கேமராவை தேவைப்படும் இடங்களில் அமைப்பதுடன் தொடர் செயல்பாடுகளை கண்காணிப்பும் அமைப்பை பராமரித்து வருவது அவசியமாகிறது.
இது போன்ற இடங்களில் கேமராக்களை பொருத்த அந்தந்த பகுதிகளில் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இணைத்து செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.