ADDED : ஆக 22, 2026 04:40 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை, ஆக.23 -
அருப்புக்கோட்டை பாளையம்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன், 33, இவர் அருப்புக்கோட்டை - விருதுநகர் ரோட்டில் மெடிக்கல் ஷாப் வைத்துள்ளார். கடையின் பாதுகாப்பிற்காக 2 சிசிடிவி., கேமராக்களை பொருத்தியுள்ளார். நேற்று முன்தினம் காலை கடைக்கு வந்து பார்த்தபோது, வெளியில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. கடைக்கு சென்று சிசிடிவி., பதிவுகளை பார்த்த போது, அருப்புக்கோட்டை நந்தவனம் பகுதியைச் சேர்ந்த சதீஷ், 28, அண்ணாமலை, 29, இருவரும் சிசிடிவி., கேமராக்களை உடைத்தது தெரிய வந்தது.
இதுகுறித்து டவுன் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
--
