/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மேல்நிலை தேக்க குடிநீர் தொட்டிகளுக்கு சி.சி.டி.வி., பொருத்தி கண்காணிப்பு

ADDED : அக் 14, 2025 03:38 AM
ராஜபாளையம்: ராஜபாளையம்மேல் நிலைத் தொட்டி அமைவிடம் சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையம் நகராட்சி குடிநீருக்காக அய்யனார் ஆற்றில் இருந்து தண்ணீரை தேக்கி சுத்திகரிப்பு குழாய் மூலம் நகர் பகுதியில் அமைந்துள்ள 6 மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் சேமித்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கூடுதல் குடிநீர் தேவைக்காக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கி புதிதாக 10 மேல்நிலை தொட்டிகள் அமைக்கப்பட்டு விநியோகம் நடக்கிறது. குடிநீர் தொட்டி சுற்றி உள்ள இடங்களில் இளைஞர்கள், சமூக விரோதிகளின் செயல்கள் அதிகரித்து வருகிறது. இது குறித்து நகராட்சி கூட்டத்தில் விவாதிக்கும் வரை பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ரபீக்: ராஜபாளையம் சம்பந்தபுரம், டி.பி மில்ஸ் ரோடு, மலையடிப்பட்டி பகுதிகளில் ஏற்கனவே மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அருகே கஞ்சா இளைஞர்கள் நடமாட்டம், மது அருந்துதல், தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி குளியல் போன்ற செயல்கள் நடந்துள்ளது.
மாநிலம் முழுவதும் இது போன்ற பிரச்சனை அதிகரித்துள்ள நிலையில் ராஜபாளையம் மேல்குடிநீர் தொட்டிகளில் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ள படி கண்காணிப்பு கேமரா அமைத்து சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டும்.