ADDED : ஜூலை 11, 2025 03:07 AM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் டூவீலரில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்துஉள்ளனர்.
ராஜபாளையத்தை சேர்ந்த முத்துகிருஷ்ண ராஜா மனைவி மகேஸ்வரி 65, நேற்று முன்தினம் கடை தெருவில் நடந்து சென்ற போது டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வேகமாக வந்த நபர் மகேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.
இதற்காக அமைக்கப்பட்ட தனிப்பிரிவு போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் சின்ன சுரைக்காய் பட்டி தெருவை சேர்ந்த அஜித்குமார் 22, என தெரிந்தது. அவரை பிடித்து 7 பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
