/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பராமரிப்பு பணியால் ரயில் சேவைகளில் மாற்றம்
/
பராமரிப்பு பணியால் ரயில் சேவைகளில் மாற்றம்
ADDED : ஏப் 03, 2025 01:39 AM
விருதுநகர்:மதுரைக் கோட்டத்தில் பராமரிப்புப் பணி காரணமாக கீழக்காணும் ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஏப்., 10 காலை 6:55 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் மயிலாடுதுறை ரயில் (16848), ஏப்., 30 மதியம் 12:10 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் செங்கோட்டை ரயில் (16847), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. பயணிகள் வசதிக்காக அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடியில் கூடுதல் நிறுத்தங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
ஏப்., 25,26,28,29,30ல் காலை 8:00 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் நாகர்கோவில் ரயில் (16322) கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. பயணிகள் வசதிக்காக அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சியில் கூடுதல் நிறுத்தங்கள் ஏற்படுத்தப்படுகிறது.
தாமதம்
ஏப்., 10 மதியம் 12:05 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய பிகனெர் ரயில் (22631) 40 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12:45 மணிக்கு புறப்படும். சேலம் கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக ஏப்., 3, 5, 8, 11ல் செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5:10 மணிக்கு புறப்படும் ஈரோடு ரயில் (16846) கரூர் வரை இயக்கப்படும். மறுமார்க்கம் செங்கோட்டை ரயில் (16845) மதியம் 3:05 மணிக்கு கரூரில் இருந்து புறப்படும். இவ்விரு ரயில்களும் ஈரோடு -- கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.
ஏப்., 11 முதல் 21 வரை (புதன் தவிர்த்து) மதுரையில் இருந்து காலை 7:05 மணிக்கு புறப்படும் கோவை ரயில் (16722) போத்தனுார் வரை இயக்கப்படும். போத்தனுார் --கோவை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

