UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் மழை வேண்டி பழைய பாளையம் அனைத்து விவசாயிகள் கமிட்டி சார்பில் 9ம் ஆண்டு வர்ண ஜெபம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அய்யனார் கோயிலில் நடந்தது.
வருண பகவானை வேண்டி வேத விற்பனர்கள் வருண காயத்ரி மந்திரங்கள் ஓத , வருண யாகம், மூலவருக்கு சிறப்பு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அபிஷேக நீர் நிரம்பிய கும்பங்களை வேத விற்பன்னர்கள் ஊர்வலமாக கொண்டு சென்று அருகே உள்ள அய்யனார் கோயில் ஆற்றில் உள்ள சிறிதளவு நீரில் நின்று மந்திரங்களை ஓதினர்.
விவசாய சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடத்தது. ஏற்பாடுகளை அனைத்து விவசாய கமிட்டியினர் செய்திருந்தனர்.
