sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஏழாயிரம்பண்ணையில் தேரோட்டம்

/

ஏழாயிரம்பண்ணையில் தேரோட்டம்

ஏழாயிரம்பண்ணையில் தேரோட்டம்

ஏழாயிரம்பண்ணையில் தேரோட்டம்


ADDED : மே 08, 2025 02:03 AM

Google News

ADDED : மே 08, 2025 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: ஏழாயிரம் பண்ணை பராசக்தி மாரியம்மன் கோயிலில் நேற்று தேரோட்டம் நடந்தது.

இக்கோயில் பொங்கல்விழா ஏப்.27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் ரிஷபம், சப்பரம், பூ பல்லாக்கு உள்ளிட்ட வாகனங்களில் நகர்வலம் வந்தார்.

மே 4 பொங்கல் விழா நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தியும் அம்மனை வழிபட்டனர். நேற்று 11ம் நாளை முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் பராசக்தி மாரியம்மன் நேற்று மாலை 4:00 மணிக்கு எழுந்தருளினார். மாரியம்மன் பக்தர்கள் மாலை 5:00 மணிக்குதேர் வடம் பிடித்து இழுத்தனர்.

பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என கோசமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.நான்கு ரத வீதி வழியாக வலம் வந்த தேர் நிலை அடைந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us