/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
துரத்தும் நாய்கள், குண்டு குழி ரோடுகளால் அல்லல்; தவிப்பில் அருப்புக்கோட்டை தெற்கு தெரு பகுதி மக்கள்
/
துரத்தும் நாய்கள், குண்டு குழி ரோடுகளால் அல்லல்; தவிப்பில் அருப்புக்கோட்டை தெற்கு தெரு பகுதி மக்கள்
துரத்தும் நாய்கள், குண்டு குழி ரோடுகளால் அல்லல்; தவிப்பில் அருப்புக்கோட்டை தெற்கு தெரு பகுதி மக்கள்
துரத்தும் நாய்கள், குண்டு குழி ரோடுகளால் அல்லல்; தவிப்பில் அருப்புக்கோட்டை தெற்கு தெரு பகுதி மக்கள்
ADDED : ஜன 03, 2025 12:06 AM

அருப்புக்கோட்டை, ; அருப்புக்கோட்டை நகராட்சி 31வது வார்டு தெற்கு தெரு பகுதியில் டூவீலர்களில் செல்வோரை துரத்தி கடிக்கும் நாய்கள்,புறநகர் பகுதிகளில் ரோடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை தெற்கு தெரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட தெருக்களும், பார்வதி நகர், ஜெயலட்சுமி நகர், பட்டாபி நகர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளும் உள்ளன. நகரின் முக்கிய பகுதியாக உள்ள தெற்கு தெரு வழியாகத்தான் அனைத்து பஸ்களும் வாகனங்களும் செல்லும்.
முக்கியமான இந்த பகுதியில் வங்கிகள், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளன. தெற்கு தெருவின்மெயின் ரோடு பல பகுதிகளில் சேதமடைந்து உள்ளது. ரோட்டை அகலப்படுத்த வேண்டும். இப்பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிவதால், இரவு நேரங்களில் தங்கள் பணி முடிந்து வீடுகளுக்கு திரும்புவோர் பயப்படுகின்றனர். டூவீலர்களில் செல்வோரை நாய்கள் விரட்டி கடிக்கிறது.
பல தெருக்களில் வாறுகால் குறுகியும் சேதமடைந்தும் உள்ளதால் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. மீனாட்சி தெருவில் மீட்கப்பட்ட நகராட்சி நிலத்தில் பூங்கா, சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும்.
தெற்கு தெரு பகுதியில் உள்ள புறநகர் பகுதிகளில் ரோடு, வாறுகால் தண்ணீர், தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
சுப்பிரமணியம் தெருவில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இங்கு வாறுகால் இல்லாததால் கழிவு நீர் வெளியேற முடியாமல் தேங்கி, கொசுக்கள் தொல்லை தாங்க முடியவில்லை.
தண்ணீர் இல்லை
சங்கீதா, குடும்ப தலைவி: சுப்பிரமணியம் தெருவில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. நகராட்சி சார்பில்குப்பை வாங்கப்படுவதில்லை. ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய்கள் அமைக்கப்பட்டு பல மாதங்களாகியும் தண்ணீர் வரவில்லை. நகராட்சி மூலம் அடி குழாய்கள், மினி பவர் பம்ப் தொட்டி அமைக்க வேண்டும்.
நடந்து செல்ல சிரமம்
ஜெயா, குடும்ப தலைவி: புறநகர் பகுதிகளுக்கு தேவையான வசதிகள் எதுவும் செய்து தருவது இல்லை. நகர் உருவாகி பல ஆண்டுகள் ஆனாலும்வசதிகள் இல்லை. மக்கள் இரவு நேரங்களில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். தெருக்களில் கழிவு நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது.
தேங்கும் குப்பை
ஜெயலட்சுமி, குடும்ப தலைவி: புறநகர் பகுதி தெருக்களில் நகராட்சி சார்பில் குப்பை வாங்கப்படுவதில்லை. காலி நிலங்களில் குப்பை கொட்டப்படுகிறது. அவை காற்றில் பறந்து தெருக்கள் முழுதும் சிதறி கிடக்கிறது. குப்பை கழிவுகளை உண்ண நாய்கள் கூட்டமாக வருகிறது. இதனால் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.