UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 04:34 PM
திருச்சுழி: திருச்சி அருகே குண்டாற்றில் தடுப்பணை அமைக்க விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை அடுத்து அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர்.
திருச்சுழி - புதுப்பட்டி பகுதியில் குண்டாறு செல்லும் வழியில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளில் நீண்ட கால கோரிக்கை. தடுப்பணை அமைந்தால் பள்ளிமடம், கடல்பச்சி, காரேந்தல், அம்பனேரி, நாடாகுளம், ஆனைகுளம் உள்ளிட்ட கண்மாய்களுக்கு நிரந்தரமாக தண்ணீர் தேக்க முடியும். இதன் மூலம் 5 ஆயிரம் ஏக்கர் நஞ்சை, கிணற்று பாசனங்களுக்கு நீர் கிடைக்கும்.
திருச்சுழி தாசில்தார் கருப்பசாமி, நரிக்குடி, திருச்சுழி நீர் பாசன துறை அதிகாரிகள், விவசாய சங்கங்கள் மாவட்ட தலைவர் ராம்பாண்டியன், செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கள ஆய்வு செய்தனர். நீர் வழித்தடத்தில் உரிய ஆய்வு செய்து சாத்திய கூறுகள் இருப்பின் தடுப்பணை கட்டப்படும் என அதிகாரிகள் கூறினர்.
