ADDED : டிச 21, 2025 03:25 AM
விருதுநகர்: விருதுநகர் மார்கெட்டில் உளுந்து லயன் 100 கிலோவிற்கு ரூ.400 முதல் ரூ.700 உயர்ந்து ரூ.7200 முதல் ரூ.7700, மல்லி லயன் 40 கிலோவிற்கு ரூ.950 குறைந்து ரூ.3550 முதல் ரூ.3700 என விற்கப்படுகிறது.
இங்கு க.எண்ணெய் 15 கிலோ ரூ.2700, ந.எண்ணெய் 15 கிலோ ரூ.6105, பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.15 அதிகரித்து ரூ.1995, சர்க்கரை 50 கிலோ ரூ.2200, ரவை 30 கிலோ ரூ.1540, பொரிகடலை 50 கிலோ ரூ.4200, கொண்டைக்கடலை 100 கிலோ ரூ.100 அதிகரித்து ரூ.6000, மைதா 90 கிலோ ரூ.4640 என விற்கப்படுகிறது.
துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ.10,000 முதல் ரூ.10,200,உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோ ரூ.9600, உளுந்து நாடு 100 கிலோவிற்கு ரூ.700 உயர்ந்து ரூ.7200 முதல் ரூ.7400, பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ.50 உயர்ந்து ரூ.9300 முதல் ரூ.9400, பட்டாணி பருப்பு 100 கிலோ ரூ.4200 முதல் ரூ.4300 என விற்கப்படுகிறது.
தொலிபருப்பு 100 கிலோவிற்கு ரூ.9100, பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோ ரூ.7500, முண்டு வத்தல் 100 கிலோ ரூ.16,000 முதல் ரூ.25,000, வத்தல் நாடு 100 கிலோ ரூ.12,000 முதல் ரூ.17,500, கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.4600, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.1800 என விற்பனை செய்யப்படுகிறது.
