ADDED : டிச 04, 2024 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ. தூய தோமா சர்ச்சில் இயேசு கிறிஸ்துவின் வருகையை குறிக்கும் வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் துவங்கியது.
குரு சேகர தலைவர் பால் தினகரன் தலைமையில் சிறப்பு ஆராதனை நடந்தது. உதவி சபை குரு ரூபன் வேத பாடம் வாசித்தார்.
பின்னர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டப்பட்டு மக்களுக்கு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. விழாவில் போதகர் ஹெலன் சாந்தகுமாரி, உதவிக் குருக்கள் கிளாட்வின், சாமுவேல் ஜெயக்குமார் உட்பட ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.