ADDED : செப் 01, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகர் வேளாங்கண்ணி அன்னை சர்ச்சின் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்த சர்ச் திருவிழா ஆண்டுதோறும் வேளாங்கண்ணி அன்னையின் பிறந்த நாளான செப். 8ல் நடக்கும். இந்த ஆண்டு 50வது ஆண்டு திருவிழா. நேற்று முன்தினம் மாலை மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து, ஆர்.ஆர்.நகர் பாதிரியார் பீட்டர் ராய், உதவி பாதிரியார் அருள்தாஸ், பங்கு இறைமக்கள் முன்னிலையில் வேளாங்கண்ணி அன்னையின் திரு உருவம் பொறித்த கொடியை ஏற்றி வைத்து துவங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து திருப்பலியும், மறையுரையும் நடந்தது. ஒன்பது நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினசரி மாலையில் நவநாள் திருப்பலியும், மறையுரையும், முக்கிய நிகழ்வான தேர்பவனி செப். 8ல் நடக்கிறது.
