ADDED : ஆக 18, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் ரயில்வே பீட ரோட்டில் உள்ள ஏசுவின் திரு இருதய ஆண்டவர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று திறப்பு விழா நடந்தது.
140 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.மதுரை மாவட்ட பேராயர் பாதிரியார் அந்தோணிசாமி சபரி முத்து முறைப்படி அபிஷேகம் பூஜைகள் செய்து ஆலயத்தை திறந்து வைத்தார்.
விருதுநகர் புனித இன்னாசியார் ஆலயம் பாதிரியார் அருள் ராயன் , ஆலய பாதிரியார் காந்தி ஆகியோர்முன்னிலை வகித்தனர். பாதிரியார்கள் ரபேல் விஜய்பாபு , மரியதுரை, பீட்டர் ராய் ஆகியோர் கலந்து கொண்ட சிறப்பு கூட்டுத் திருப்பலி பூஜை நடந்தது.