UPDATED : ஆக 10, 2026 04:35 PM
ADDED : ஆக 10, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
சாத்துார்:சாத்துாரில் மத்தியரசின் தொழிலாளர்கள், விவசாயிகள் விரோத போக்கை கண்டித்து சி.ஜ.டி.யு சங்கத்தினர் மறியல் செய்தனர்.
சாத்துார் தபால் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு சி.ஜ.டி.யு சாலை போக்குவரத்து சங்க மாவட்ட தலைவர் விஜயகுமார், மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட துணைத் தலைவர் சந்திரன் தலைமை வகித்தனர்.
போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் என பெண்கள் 33 பேர் உட்பட 80 பேர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
