ADDED : ஆக 25, 2026 06:31 PM
அ நிறம் | அளவு
விருதுநகர், ஆக. 26 -
விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் சி.ஐ.டி.யு., சார்பில் போக்கவரத்து கழகங்களுக்கு நிதி வழங்குதல், ஒப்பந்தம், அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குதல் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய சங்க தலைவர் திருப்பதி தலைமையில் 24 மணி நேர தொடர் முழக்க போராட்டம் நடந்தது.
இதில் மதுரை மத்திய சங்க உதவி தலைவர் ராஜேந்திரன், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் மகாலட்சுமி, போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் வெள்ளைத்துரை உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
