தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விபத்தை தவிர்க்க பட்டாசு ஆலைகளில் அரசு உத்தரவிட்ட விதிமுறைகளை தவறாமல் கடைபிடியுங்க

விபத்தை தவிர்க்க பட்டாசு ஆலைகளில் அரசு உத்தரவிட்ட விதிமுறைகளை தவறாமல் கடைபிடியுங்க

விபத்தை தவிர்க்க பட்டாசு ஆலைகளில் அரசு உத்தரவிட்ட விதிமுறைகளை தவறாமல் கடைபிடியுங்க


UPDATED : மே 07, 2026 05:15 PM

ADDED : மே 07, 2026 05:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 07, 2026 05:15 PM ADDED : மே 07, 2026 05:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி:பட்டாசு ஆலைகளில் விபத்துக்களை தடுக்க பாதுகாப்பு அரசு உத்தரவிட்ட விதிகளை உரிமையாளர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அதிகாரிகள் ஆய்வு செய்து விதிமுறைகளை பின்பற்றாத ஆலைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை சுற்று பகுதிகளில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் . இதில் விபத்தில்லாமல் பட்டாசு உற்பத்தி செய்வது குறித்தும், பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாதம்தோறும் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் அதிகாரிகளுடன் பாதுகாப்பு குழு கூட்டம் நடத்தப்படுகிறது. ஆனால் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து 2024 இறுதியில், பட்டாசு ஆலைகளில் விபத்தினை தடுப்பதற்காக,

பட்டாசு ஆலைகளை குத்தகை, உள்குத்தகைக்கு விடமாட்டேன். உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட பட்டாசுகளை மட்டும் உற்பத்தி செய்வேன். உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடி உற்பத்தி செய்தாலோ, இருப்பு வைத்தாலோ விசாரணையின்றி உரிமத்தை ரத்து செய்யலாம். பட்டாசு ஆலை உரிம வரைபடத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களை மட்டுமே பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுத்துவேன். திறந்த வெளியிலோ, மரத்தடியிலோ பட்டாசு உற்பத்தி செய்ய மாட்டேன். தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு உறுதியளிப்பேன். ஜி.எஸ்.டி., வரியை முறையாக செலுத்துவேன்.

தடை செய்யப்பட்ட மூலப்பொருட்கள், தடை செய்யப்பட பட்டாசுகளை உற்பத்தி செய்ய மாட்டேன். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த மாட்டேன். வெடிபொருள் சட்டத்திற்கு உட்பட்டு பட்டாசு உற்பத்தி செய்கிறேன். இதில் விதிமீறல் தெரிய வந்தால் உரிமத்தை ரத்து செய்யலாம், என 10 விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவேன் என, ஒவ்வொரு பட்டாசு ஆலை உரிமையாளர்களிடமும் சம்பந்தப்பட்ட உறுதிமொழி பிரமான பத்திரம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என அப்போதைய கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் இவற்றில் பெரும்பாலான விதிமுறைகளை ஒருசில பட்டாசு ஆலைகள் பின்பற்றுவதில்லை. இதனாலேயே தொடர் விபத்துகள் ஏற்படுகிறது. சமீபத்தில் சிவகாசி விருதுநகர் பகுதியில் நடந்த பட்டாசு ஆலை விபத்துகளுக்கு முக்கிய காரணம் ஆலைகள் குத்தகைக்கு விடப்பட்டதே. மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் இதுபோன்று விதிமுறைகளை பின்பற்றாததால் அடுத்தடுத்து வெடி விபத்துக்கள் நடந்து வருகிறது. எனவே இது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us