தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/உள்குத்தகைக்கு விடப்படும் மாநகராட்சி, நகராட்சி கடைகளால் வருவாய் இழப்பு:அரசியல் பண பலம் உள்ளவர்களால் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு

உள்குத்தகைக்கு விடப்படும் மாநகராட்சி, நகராட்சி கடைகளால் வருவாய் இழப்பு:அரசியல் பண பலம் உள்ளவர்களால் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு

உள்குத்தகைக்கு விடப்படும் மாநகராட்சி, நகராட்சி கடைகளால் வருவாய் இழப்பு:அரசியல் பண பலம் உள்ளவர்களால் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு

1


UPDATED : ஜூன் 11, 2026 04:48 PM

ADDED : ஜூன் 11, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 11, 2026 04:48 PM ADDED : ஜூன் 11, 2026 04:40 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில் மாநகராட்சி . நகராட்சிகளில் அரசியல், பண பலம் படைத்தவர்களால் கடைகள் உள்குத்தகைக்கு விடப்படுவதால் நிர்வாகத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வதில் மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் தடுமாறுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார் ராஜபாளையம், சாத்துார் நகராட்சிகள் உள்ளன. மாநகராட்சி, நகராட்சிகளில், நிர்வாகத்திற்கு சொந்தமாக அடுக்குமாடி வணிக வளாகங்கள், மார்க்கெட்கள் உட்பட பல்வேறு கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் சார்பில் குத்தகைக்கு விடப்படும். இதன் மூலம் வணிகர்கள், வியாபாரிகள் பயன் பெறுவர் என்ற நோக்கத்தில் நிர்வாகம் மூலமாக குத்தகைக்கு விடப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கின்ற வருவாய் பொது நிதிக்கு கொண்டு செல்லப்பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் கடைகளை குத்தகைக்கு எடுக்கின்ற அரசியல், பண பின்புலம் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு உள் குத்தகைக்கு விடுகின்றனர். மேலும் ஒரே கடையை இரண்டாகப் பிரித்து வாடகைக்கு விடுவது, கடைகளுக்கு வெளியே ஆக்கிரமிப்பு செய்து சாலை வியாபாரிகளுக்கும் வாடகைக்கு விடுவது போன்ற அத்துமீறல்கள் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

இந்தக் கடைகள் முறைப்படி டெண்டர் விடப்பட்டாலும் உள்குத்தகை என்ற பெயரில் விதி மீறலே நடக்கிறது. உதாரணமாக சிவகாசி மாநகராட்சியில் அண்ணாதுரை காய்கறி மார்க்கெட்டில் 142 கடைகள், அரசன் காம்ப்ளக்ஸில் 15 கடைகள், பஸ் ஸ்டாண்டில் 30 கடைகள் என ஏராளமான கடைகள் மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ளது. இவைகள் முறைப்படி டெண்டர் விடப்பட்டிருந்தாலும் உள்குத்தகைக்கு விடப்படுகிறது. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதே நிலைதான் அனைத்து நகராட்சிகளிலும் தொடர்ந்து நடக்கிறது. இதனை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்தாலும் விதிமீறல்களை தடுக்க முடியவில்லை. இத்தகைய செயல்களால் தனி நபர்கள் மட்டுமே அதிக வருவாய் ஈட்டுகின்றனர். மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களில் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே உள் குத்தகைகளை சரி செய்து வருவாய் இழப்பை தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us