sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரசு ஊழியர் சங்க கட்டடத்தை கைப்பற்றுவதில் இரு பிரிவினருக்குள் மோதல்; கட்டடத்திற்கு சீல் சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சட்டை கிழிப்பு

/

அரசு ஊழியர் சங்க கட்டடத்தை கைப்பற்றுவதில் இரு பிரிவினருக்குள் மோதல்; கட்டடத்திற்கு சீல் சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சட்டை கிழிப்பு

அரசு ஊழியர் சங்க கட்டடத்தை கைப்பற்றுவதில் இரு பிரிவினருக்குள் மோதல்; கட்டடத்திற்கு சீல் சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சட்டை கிழிப்பு

அரசு ஊழியர் சங்க கட்டடத்தை கைப்பற்றுவதில் இரு பிரிவினருக்குள் மோதல்; கட்டடத்திற்கு சீல் சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சட்டை கிழிப்பு


ADDED : ஜூலை 14, 2025 06:21 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டடத்தை கைப்பற்றுவதில் இரு பிரிவினருக்குள் ஏற்பட்ட மோதலில் சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் தேவா சட்டை கிழிக்கப்பட்டது. இருதரப்பினர்களையும் போலீசார் கைது செய்தனர். மண்டல துணை தாசில்தார் பால்ராஜ் தலைமையில் வருவாய் அலுவலர்கள் சங்க கட்டடத்திற்கு சீல் வைத்தனர்.

விருதுநகர் ஆனைக்குழாயில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டடம் 3744 சதுர அடியில் கட்டப்பட்டு எம்.ஆர்., அப்பன் இல்லம் என்ற பெயரில் 2007 ஜூலை 1 திறக்கப்பட்டது. கட்டட உரிமை மாநில பொது செயலாளர் பெயரில் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இம்மாவட்ட அரசு ஊழியர் மையம் சில ஆண்டுகளுக்கு முன் கலைக்கப்பட்டது. இதன் பின் மாநில மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு ஊழியர் சங்கத்திற்கு மாவட்ட தலைவராக பாண்டித்துரை, செயலாளராக கருப்பையா நியமிக்கப்பட்டனர்.

மற்றொரு அரசு ஊழியர் சங்கத்திற்கு மாவட்ட தலைவராக அந்தோணி ராஜ், செயலாளராக வைரவன் உள்ளனர். இவர்கள் அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டடத்தில் செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அரசு ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் சீனிவாசன், மாநில செயலாளர் நீதிராஜா, மாவட்ட தலைவர் பாண்டித்துரை, செயலாளர் கருப்பையா, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் தேவா உள்ளிட்ட நிர்வாகிகள் சங்க அலுவலக பூட்டை உடைத்து கொடியேற்றி எழுச்சி நாள் கருத்தரங்கத்தை நடத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்தோணி ராஜ், செயலாளர் வைரவன் போலீசில் புகார் அளித்தனர். தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சங்க அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பாண்டித்துரை, கருப்பையா தரப்பு நேற்று முன்தினம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதனால் இரு தரப்புக்கும் பிரச்னை ஏற்படாமல் இருக்க சங்க கட்டடத்தில் டி.எஸ்.பி., யோகேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சங்க கட்டடத்தில் இருந்த மாநில பொறுப்பாளர்களிடம் அலுவலகத்தை பூட்டி சாவியை எடுத்துச் செல்லுங்கள், தாலுகா அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பு பிரச்னையையும் முடிவுக்கு கொண்டு வருவோம் என மண்டல துணை தாசில்தார் பால்ராஜ், டி.எஸ்.பி., யோகேஷ் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து போலீசார் பின் வாங்கியதால் சங்க கட்டடத்திற்குள் மற்றொரு பிரிவான அந்தோணி ராஜ், வைரவன் தரப்பினர் உள்ளே செல்ல முயன்ற போது இரு பிரிவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதலாக மாறியது.

இதில் பொறுப்பாளர்களுக்கு ஆதரவாக இருந்த சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் தேவா சட்டை கிழிக்கப்பட்டது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் போலீசார் உள்ளே புகுந்து இரு தரப்பையும் விலக்கினர். அந்தோணி ராஜ், வைரவன் தரப்பினரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

சங்க கட்டடத்தில் இருந்த மாநில பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் வெளியேற்றினர். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து மாநில பொது செயலாளர் சீனிவாசன் தலைமையில் வாயிலில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இவர்களிடம் ஏ.டி.எஸ்.பி., அசோகன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. சங்க நிர்வாகிகளை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். கட்டடத்திற்கு துணை தாசில்தார் பால்ராஜ், அலுவலர்கள் சீல் வைத்தனர்.

போலீசார் அராஜகம் என தர்ணா


கட்டடத்தில் இருந்த மாநில பொது செயலாளர் சீனிவாசன் உட்பட நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக போலீசார் வெளியேற்றியதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. போலீசார் மரியாதையாக நடந்து கொள்ளாமல் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும், மோதலுக்கு முக்கிய காரணம் டி.எஸ்.பி., யோகேஷ் குமார், எஸ்.ஐ., ராமர் எனவும் கூறி தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். பெண் நிர்வாகிகளை ஆண் போலீசார் கையை பிடித்து இழுத்து வெளியேற்றியதாகவும் குற்றம்சாட்டினர்.

விருதுநகர் உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் ஒரு பிரிவு மாவட்ட தலைவர் அந்தோணி ராஜ், செயலாளர் வைரவன் தரப்பினர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இவ்வழக்கில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டடத்தை நிர்வகிப்பது யார் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். அதுவரை இரு தரப்பினரும் சங்க கட்டடத்தை பயன்படுத்தக்கூடாது என விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us