ADDED : ஏப் 19, 2026 10:27 PM
அ நிறம் | அளவு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே ரெங்கபாளையம் விலக்கு என்ற இடத்தில் நேற்று மாலை 5:00 மணிக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கரிகால பாண்டியன் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த புதிய தமிழகத்தைச் சேர்ந்த சிலர் அவருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே லேசான கைகலப்பு ஏற்பட்டது. வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.
