/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஜயகரிசல் குளம் அகழாய்வில் சுடுமண் குடுவை கண்டெடுப்பு
/
விஜயகரிசல் குளம் அகழாய்வில் சுடுமண் குடுவை கண்டெடுப்பு
விஜயகரிசல் குளம் அகழாய்வில் சுடுமண் குடுவை கண்டெடுப்பு
விஜயகரிசல் குளம் அகழாய்வில் சுடுமண் குடுவை கண்டெடுப்பு
ADDED : ஜன 22, 2025 02:01 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் சுடுமண் குடுவை, முத்திரை, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன.
விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 3210 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது சுடுமண் குடுவை, முத்திரை, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், நீர் ஆகாரங்களை பயன்படுத்தும் குடுவை கிடைத்துள்ளது. இங்கு இதுவரையிலும் 30 க்கும் மேற்பட்ட முத்திரைகள் கிடைத்துள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறியீடுகளை கொண்டுள்ளதால் முன்னோர்கள் குழுக்களாக பிரிந்து வணிகத்தில் ஈடுபட்டது தெரிகிறது. தமிழகத்தில் நடக்கும் பல்வேறு அகழாய்வில் கிடைத்துள்ள சங்கு வளையல்களை விட இங்கு கிடைக்கும் வளையல்கள் நுணுக்கமான அலங்காரங்களை கொண்டுள்ளதாக இருக்கிறது, என்றார்.