/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் ஓடை பகுதிகளை சுத்தம் செய்யும் பணி
/
சிவகாசியில் ஓடை பகுதிகளை சுத்தம் செய்யும் பணி
ADDED : செப் 27, 2024 04:25 AM
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் துாய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்வின் கீழ் துாய்மையே எனது பழக்கம் துாய்மையே எனது வழக்கம் என்ற கருத்தை வலியுறுத்தி செங்குளம், சிறுகுளம் கண்மாய் கரை பகுதிகளில் புதர்கள் அகற்றி சுத்தம் செய்யும் பணி நடந்தது.
சுப்பிரமணியர் கோயில் ஓடை, மருதுபாண்டியர் தெரு ஓடை, சுந்தரம் தெரு ஓடை, காமராஜர் சாலை ஓடை, தெய்வானை நகர் ஓடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதர்கள் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை மேயர் சங்கீதா, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தனர். தொடர்ந்து அதிகாரிகள், துாய்மை பணியாளர்கள் துாய்மை விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கமிஷனர் கூறுகையில், துாய்மையே சேவை திட்டத்தின் கீழ் மாநகரை துாய்மையாக்க பராமரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது தன்னார்வலர்கள், மக்கள் துாய்மை பணியில் பங்கேற்க வேண்டும், என்றார்.

