தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காலநிலை மாற்ற விழிப்புணர்வு

காலநிலை மாற்ற விழிப்புணர்வு

காலநிலை மாற்ற விழிப்புணர்வு


ADDED : நவ 24, 2024 07:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2024 07:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் காலநிலை மாற்றம் குறித்து மேகமலை புலிகள் சரணாலய வனச்சரக எல்லை உட்பட்ட பத்திரிகையாளர் ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

சாத்துார் வனச்சரக அலுவலர் கார்த்திக் வரவேற்றார். மேகமலை புலிகள் சரணாலய துணை இயக்குனர் தேவராஜ் தலைமை வகித்து பேசியதாவது, காலநிலை மாற்றத்திற்கான விளைவுகள் அதிகம் பார்த்து வருகிறோம். அதற்கான காரணங்களை இதுதான் என வரையறுத்து கூற முடியவில்லை. தொடர்ச்சியான செயல்பாட்டின் மூலமே இதைக் வெளிக்கொண்டுவர முடியும்,என்றார்.

கடல்சார் ஆராய்ச்சியாளர் நாராயணி கூறுகையில், பசுமை குடில் வாயுவின் தாக்கத்தால் புவி சராசரி வெப்பநிலை மாறுபடுவது அதன் பாதிப்புகள் இதனால் ஏற்படும் அவசரநிலை பற்றிய தெளிவு வேண்டும்.

பருவ கால மாற்ற பிரச்சனைகள் காலநிலை மாற்றத்தால் நேரடி தீவிரத் தன்மை உலக அளவில் வழங்கப்படும் தகவல்களின் அறிவியல் மொழி புரிந்து மக்களுக்கு பதற்றம் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை குறையாமல் தகவல்கள் வழங்க வேண்டும்., என்றார். நிகழ்ச்சியில் வனத்துறையினர், செய்தியாளர்கள், வன உயிர் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us