/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 08, 2024 12:26 PM

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவுத்துறையில் இளநிலை ஆய்வாளர் பதவியில் இருந்து முதுநிலை ஆய்வாளர் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு சொந்த மாவட்டத்தில் காலிபணியிடங்கள் இருந்தும் வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அந்தோணிராஜ் தலைமையில்ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத்தலைவர் கோதண்டராமன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ராஜகோபாலன், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மாரியப்பன் உட்பட பலர் பேசினர். மாவட்டத் துணைத் தலைவர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.

