/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் கோச் பொசிஷன் டிஸ்ப்ளே போர்டுகள்

ADDED : பிப் 03, 2024 05:05 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் பெட்டியில் நிற்கும் இடத்தை பயணிகள் எளிதாக அறிந்து கொள்ள வசதியாக கோச் பொசிஷன் டிஸ்ப்ளே போர்டுகள் பொருத்தப்பட்டு நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் லிப்ட், பார்க்கிங், பூங்கா, நுழைவாயில் அழகு படுத்துதல், போதிய இருக்கை, குடிநீர், மின்விளக்குகள், ரயில் வருகை, புறப்பாடு, நடைமேடை விபரங்கள், ரயில் பெட்டிகள் நிற்கும் இடங்களை பயணிகள் அறிந்து கொள்ள வசதியாக டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகள் பொருத்தும் பணி துவங்கியது.
இதில் லிப்டிற்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் விரைவில் கருவிகள் பொருத்தப்பட உள்ளது. இந்நிலையில் இரண்டு நடை மேடைகளிலும் ரயில் பெட்டிகள் நிற்கும் இடங்கள் குறித்த டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகள் பொருத்தப்பட்டு, நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம் இதுவரை ஸ்ரீவில்லிபுத்தூர் பயணிகள் பட்ட சிரமம் முடிவுக்கு வந்தது.
இதுதவிர மற்ற பணிகளும் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிந்து புதிய பொலிவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷன் காணப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.