ADDED : ஜன 21, 2024 03:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்களுடனான விண்வெளிப்பயணம் என்ற தலைப்பில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி விருதுநகரில் கலெக்டர் ஜெயசீலன் தலை மையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் சந்திரயான் -3 திட்ட இயக்குநர்வீரமுத்துவேல் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடி விண்வெளி குறித்த சந்தேகங்களுக்கு பதிலளித்தார். நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்கள் அனைவருக்கும் புத்தகங்களை விஞ்ஞானி வீரமுத்துவேல் வழங்கினார்.
கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது:
இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கம் மாணவர்கள் உயர்ந்த இடத்தை அடைவதற்கு பின்புலம் இல்லை என்பது ஒரு தடை இல்லை. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பை தொடர்ந்தால் வாழ்வில் சாதிக்க முடியும், என்றார்.

