ADDED : ஜூன் 26, 2025 12:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தின் 25வது கலெக்டராக டாக்டர் என்.ஓ.சுகபுத்ரா பொறுப்பேற்றுக் கொண்டார்.
நேற்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த டாக்டர் என்.ஓ.சுகபுதிரா, மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 2017 ஐ.ஏ.எஸ்., பிரிவைச் சேர்ந்தவர்.
2018ல் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி கலெக்டராக நியமிக்கப்பட்டார். ராமநாதபுரத்தில் சப் கலெக்டராகவும், தஞ்சாவூர் கூடுதல் வருவாய் கலெக்டராகவும், திருவள்ளூர் கூடுதல் வளர்ச்சி கலெக்டராகவும், பொறுப்பு வகித்துள்ளார்.