/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அகழாய்வு கண்காட்சியை பார்வையிட்ட கலெக்டர்
/
அகழாய்வு கண்காட்சியை பார்வையிட்ட கலெக்டர்
ADDED : ஜூலை 08, 2025 01:18 AM
சிவகாசி: விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் கண்காட்சி, கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணியை கலெக்டர் சுகபுத்ரா பார்வையிட்டார்.
இங்கு நடந்த அகழாய்வில் இதுவரையிலும் சுடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள்,   வட்ட சில்லு, சூது பவள மணி, தங்க மணி உள்ளிட்ட 5012 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  மூன்றாம் கட்ட அகழாய்வு முடிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் 3 கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.  பொருட்களை ஆவணப்படுத்தும் பணி அகழாய்வு குழிகள், கண்காட்சியினை கலெக்டர் சுகபுத்ரா பார்வையிட்டார். அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி விளக்கம் அளித்தார். தாசில்தார் கலைவாணி, அதிகாரிகள் உடன் இருந்தனர்.

