ADDED : ஜன 21, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டியில் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தின் கீழ் குடும்பங்களை நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தித்து, பல்வேறு அரசுத்துறை நலத்திட்டங்களின் தற்போதைய நிலை, திட்டங்களில் செயல்திறன், மக்களின் பூர்த்தி செய்யப்படாத தேவைகள் உள்ளிட்ட 10 வகையான திட்டங்கள் அடங்கிய படிவத்தை மக்களிடம் வழங்கி வருகின்றனர்.
இப்பணிகளை கலெக்டர் சுகபுத்ரா நேரில் கள ஆய்வு செய்தார்.
