/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்லுார்ி முன்னாள் மாணவர்கள் கவுரவிப்பு
/
கல்லுார்ி முன்னாள் மாணவர்கள் கவுரவிப்பு
ADDED : ஆக 05, 2025 06:38 AM

சிவகாசி : சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் முன்னாள் சிறந்த மாணவர்களை கவுரவிக்கும் விழா நடந்தது.
முன்னாள் மாணவர் சங்கம் செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் வரவேற்றார். யோகேஸ்வரன் கடந்த கூட்டத்தின் அறிக்கை சமர்ப்பித்தார். சங்கம் செயலர் வேலுச்சாமி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
பொருளாளர் பரமேஸ்வரன் ஆண்டு கணக்கு அறிக்கை வழங்கினார். கல்லுாரியில் ஆட்சி குழு தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். முதல்வர் அசோக் வாழ்த்தினார்.
முன்னாள் மாணவர்கள் தி பிரசிடெண்ட் மேட்ச் கம்பெனி பங்குதாரர் நாகராஜன், கோவில்பட்டி தேசிய பொறியியல் கல்லுாரியில் முதல்வர் காளிதாச முருகவேல், சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துவேல் பாண்டி, சிங்கப்பூர் சீனி பாலசுப்பிரமணியன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். முன்னாள் மாணவர் சங்கம் நிர்வாக குழு உறுப்பினர் நாகராஜன் நன்றி கூறினார்.