ADDED : மார் 10, 2024 04:44 AM
அ நிறம் | அளவு
சாத்துார், : சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்.பாலிடெக்னிக் கல்லுாரி 15வது ஆண்டு விழா நடந்தது.
நிர்வாக குழு தலைவர் மெரிட் பெருமாள் சாமி தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் சாந்தலட்சுமி முன்னிலை வகித்தார்.
முதல்வர் தனலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை தலைவர் ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். துறை வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
ராம்கோ சிமெண்ட் மூத்ததுணை மேலாளர் ஸ்ரீதர், எஸ்.ஆர்.என்.எம்.கல்லுாரி முதல்வர் ராஜகுரு, கம்மவார் டிரஸ்ட் நிர்வாகிகள், மாணவர்கள் பெற்றோர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
