ADDED : பிப் 25, 2026 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி ஆனைக்குட்டம் சங்கரலிங்கம் புவனேஸ்வரி பார்மசி கல்லுாரியில் 36 வது ஆண்டு விழா நடந்தது.
கல்லுாரி தாளாளர் ஹரிராம் சுந்தரவேல் துவக்கி வைத்தார். முதல்வர் சோலை ராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். சிவகாசி அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் அய்யனார், காலத்திற்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு, மருந்து தயாரிப்பு பற்றி பேசினார்.
திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி இணை பேராசிரியர் ரெமி மருந்தாக்கியல் துறையின் மகத்துவம் பற்றி பேசினார். படிப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கல்லுாரி துணை முதல்வர், பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

