ADDED : மார் 19, 2026 04:46 AM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி ,ரமணாஸ் கல்வியியல் கல்லூரிகளின் ஆண்டு விழா நடந்தது.
கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பி.எட்., கல்லூரி செயலர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். மகளிர் கல்லூரி செயலாளர் டாக்டர் இளங்கோவன் வரவேற்றார். கல்லூரிகளின் முதல்வர்கள் ராஜேந்திரன், தில்லை நடராஜன் ஆண்டறிக்கை வாசித்தனர். மதுரை அமெரிக்கன் கல்லூரி முன்னாள் முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், டி.எஸ்.பி., கண்ணன் பேசினர்.
விளையாட்டு, தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. துணை முதல்வர் கலைச்செல்வி தொகுத்து வழங்கினார். கலைக்கல்லூரி துணை முதல்வர் பவுர்ணா நன்றி கூறினார்.
