ADDED : பிப் 25, 2026 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: பிப். 25--: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியில், கம்ப்யூட்டர் அறிவியல் துறை சார்பாக கல்லூரிகளுக்கு இடையேயான ' சிப் பெஸ்ட் 2026' என்ற தலைப்பில் போட்டிகள் நடந்தது.
தகவல் தொழில்நுட்ப துறையுடன் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை தலைவர் சுதாகர் ஆலோசனைகள் வழங்கினார். கல்லூரிச் செயலர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். தலைவர் மயில்ராஜன் முன்னிலை வகித்தார். முதல்வர் ராதா வரவேற்றார்.
துறைத்தலைவர் விக்னேஷ் பிரபு, தகவல் தொழில்நுட்ப தலைவர் யுவராணி, கம்ப்யூட்டர் பயன்பாட்டு துறை தலைவர் உமா ஆகியோர் பேசினர்.
விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசினை வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பேராசிரியர்கள் செய்தனர்.

